|
தமது கல்விக்கான உதவிகள்
தேவைப்படுகின்ற பாடசாலை மற்றும்
பல்கலைக்கழக
மாணவ மாணவிகளுக்கு உங்களின்
உதவிகளை அள்ளி வழங்குங்கள். ...
பல்வேறு சிரமங்களின் மத்தியில் தமது
கல்விச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள
மாணவர்களுக்கு ‘சமாதி பிரக்ஞா
பிரதீப’
நிகழ்ச்சித்திட்டத்தினூடாக நீங்களும்
தற்போது உதவிகளை வழங்கலாம். இதன்
பொருட்டு உங்களின் பெயரிலோ அல்லது
இறந்த உறவினரொருவரின் பெயரிலோ புலமைச்
பரிசில் வழங்க பங்களிப்புச் செய்ய
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இக்கருத்திட்டம் இரண்டு வழிமுறைகளில்
அமுலாக்கப்படுகின்றது.
முதலாவது வழிமுறை......
ஒரு வருட காலப்பகுதிக்காக நிதிசார்
அல்லது பொருள்சார் உதவிக்காக
12,000/=
இலங்கை ரூபாவினை (120
அ.டொலர்) நன்கொடையாக வழங்க உங்களுக்கு
வாய்ப்பு உண்டு.
இரண்டாவது வழிமுறை....
நீங்கள் விரும்புகின்ற
காலப்பகுதிக்காக சம்பந்தப்பட்ட
மாணவன்
/
மாணவியின் பெயரில் எம்மால்
தொடங்கப்படுகின்ற சேமிப்புக்
கணக்கிற்கு மாதந்தோறும்
1000/=
இலங்கை ரூபா வீதம்
(10
அ. டொலர்) நன்கொடையாக வழங்கவும்
உங்களுக்கு வாய்ப்பு உண்டு.
புலமைப்பரிசில் பெறுநர்களை
தெரிவுசெய்யும் வழிமுறை
மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் கல்வி
நிறுவன அதிகாரிகளின் பரிந்துரையின்
பேரில் தெரிவு செய்தல் இடம்பெறுவதோடு
ஏற்புடைய கிராம உத்தியோகத்தரின்
சான்றுரையும் கட்டாயமாகப் பெறப்படும்.
(பாடசாலை மாணவரெனில் சம்பந்தப்பட்ட
பாடசாலை அதிபரின் விதப்புரை
அவசியமென்பதோடு பல்கலைக்கழக மாணவர்க
ளுக்காக ஏற்புடைய பீடத்தின்
பீடாதிபதியின் அல்லது பதிவாளரின்
விதப்புரை அவசியமாகும்.)
அணுசரனைக்காக |