Welcome to Samadhi Community Development Foundation ...!

www.samadhifoundation.org

   
   
 

முதற்பக்கம்

வரலாறு

பதி

நோக்கு

பணி

நாம் முனைந்து நிற்பது

எமது நம்பிக்கைகள்

கருத்திட்டங்கள் / செயற்பாடுகள்

இதுவரை ஈடேற்றிய கருத்திட்டங்கள்

சேவை வழங்கும் பிரதேசங்கள்

அலுவலக வளவுகள்

முகாமைத்துவக் குறிப்பு

நன்கொடைகள் / உதவிகள்

e - தொழில் வங்கி

நிழற்படத் தொகுப்பு

எம்முடன் தொடர்புகொள்க

......................................

எம்முடன் தொடர்பு கொள்க

..:: முகவரி ::..

"சமாதி மெதுர", இலக்கம் 47,

ஸ்ரீ ரத்தனபால மாவத்த,

 மாத்தறை, இலங்கை.

....................................

..: தொலைபேசி / பக்ஸ் :..
+94 41 2230946
+94 77 7306922

....................................

..:: மின்னஞ்சல் ::..
samadhiprojects@gmail.com
....................................
..:: வெப் தளம் ::..
www.samadhifoundation.org
 
 

:::  சமாதி மன்றம் அன்புடன் வரவேற்கிறது !

 
  எமது  தொனிப்பொருட்களும்  நம்பிக்கைகளும்
     
 
பிரதான தொனிப்பொருட்கள் செயற்பாடுகள்

இளைஞர் வலுவூட்டல்

இலக்குக் குழு : 16 முதல் 35 வயது வரையான இளைஞர்கள்

நன்மை : நிதிசார், பொருள்சார் அனுசரணைகளும் அறிவு, வசதிகளை வழங்குதலும்

இளைஞர் அபிவிருத்தி, வாழ்க்கைத் தொழில் பயிற்சி மூலமாக கொள்திறனைக் கட்டியெழுப்புதல், விளையாட்டுத் துறை, மற்றும் கல்வித்திறன்கள், தலைமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், மக்கள் தொடர்பாடல், தமிழ், ஆங்கில மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஏனைய மொழிகளின் பயிற்சி, நலனோம்பல் செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்கேற்பினை ஊக்குவித்தல், நுண் நிதி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்.

மனிதவள அபிவிருத்தி, கல்வி மற்றும் பயிற்சி

 

இலக்குக் குழு : பொது மக்களும் தொழில் வாய்ப்பற்ற குழுக்களும்

நன்மை : அறிவு, நிதிசார், மற்றும் பொருள்சார் உதவிகளை வழங்குதலும்

உடல், உளரீதியான அணிகளை பல்வேறு கருத் திட்டங்கள் மூலமாக வலுவூட்டுதலும் அவர்களுக்கு உதவுதலும்.

புதிய நூல்நிலையங்களைத் தாபித்தலும், இயங்கி வருகின்ற நூல்நிலையங்களுக்கு அனுசரணை வழங்குதலும்.

தரவுத்தளத்தினூடாக (Database) அரச, அரச துறையல்லாத, தனியார்துறை தொழில் தருநர்களுக்கும் தொழில்களை எதிர்பார்த்துள்ளவர்களுக்கும் இடையிலான இணைப் பாக்கம் e - தொழில்வங்கி மற்றும் தொழில்சந்தை ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினர் களைத் தொடர்புபடுத்துதல்

 

சமாதானம், சனநாயகம் மற்றும் சுதந்திரமான சந்தைக் கோட்பாடுகளை அடிமட்டத்தில் பலப்படுத்தல்

இலக்குக் குழு : அடிமட்ட மற்றும் கிராமிய மட்ட சனசமூகங்கள்,  பிரதேச சிவில் சமூக அமைப்புக்கள் பிரதேச ஊடகவியலாளர்கள்,  மற்றும் பிரச்சார குழுக்கள்

நன்மை : விழிப்பூட்டலை மேம்படுத்துதலும் பங்காண்மை அமைப்புக்களை கட்டியெழுப்புதலும்

சனநாயக நன்நெறிகள், சுதந்திர வர்த்தக பொருளாதாரம். நல்லாட்சி, சமாதானக்கல்வி, முரண் பாட்டுத் தீர்வும் முகாமைத்துவமும், ஆண் - பெண் சமத்துவம், அதிகாரப் பகிர்வு, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய துறைகள் பற்றிய விழிப்பூட்டலை மேம்படுத்து வதற்கான பல்வேறு உரையாடல் அரங்குகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், கல்வி மற்றும் பிரச்சாரக் கருத்திட்டங்களை ஏற்பாடு செய்தல்.

சுகாதாரமும் நல்வழிகளும்

இலக்குக் குழு : எந்தவொரு வயதுப் பிரிவைவும் சேர்ந்த அறிவில் பின்தங்கிய குழுக்களும் குறைந்த வருமானம் பெறுகின்ற குழுக்களும்

நன்மை : நிதிசார்,பொருள்சார் அனுசரணையையும் அறிவினையும் வழங்குதல்.

சாதாரண பொதுமக்களின் சுகாதார, துப்புரவேற் பாட்டுச் சேவை மட்டத்தை மேம்படுத்துவதற்கான மருந்துவ முகாம்கள், ஆரம்ப சனசமூக சுகாதாரக் கருத்திட்டங்களை அமுலாக்குதல், ஆயுர்வேத மரபுகளை விருத்தி செய்தல். மதுசாரம், புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனையைக் குறைப்பதற்கான முயற்சிகள், பாலியல் ரீதியாகப் பரவுகின்ற நோய்கள் மற்றும் எச். ஐ. வீ. தடுப்பு முயற்சிகளை அமுலாக்குதல்

வாழ்வாதார இடையீடுகள்

இலக்குக் குழு : விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும் மற்றும் கமக்காரர்களும் விலங்கு வேளாண்மையில் ஈடுபட்டுள்ளவர்களும்

நன்மை : அறிவு, நிதிசார், மற்றும்  பொருள்சார் அனுசரணை  வழங்குதல்.
 

விவசாய, கடற்றொழில் மற்றும் விலங்கு வேளாண் மைக் கருத்திட்டங்களை அமுலாக்குவதும் சேதனப் பயிர்ச்செய்கை அபிவிருத்தியும், பல்வேறு நவீன இயந்திர முறைகளினூடாக, நவீன தொழில்நுட்ப வழிமுறைகளை அறிமுகஞ் செய்தல்.

தொழில்முயற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், சுயதொழில் கருத்திட்டங்கள், நுண் நிதி வசதிகளை வழங்குதல், திறமைகளை அபிவிருத்தி செய்தலும் கிராமிய மக்களுக்கு வழுவூட்டுதலும், அடிமட்ட சிவில் அமைப்புகளின் கொள்திறன் அபிவிருத்திக்கு அவசியமான இடையீடுகள் மூலமாக கிராமிய, நகர்சார் மற்றும் பகுதியளவில் நகர்சார்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு கருத் திட்டங்களை அமுலாக்குதல்.

திடீர் அனர்த்த நிவாரணங்கள்

இலக்குக் குழு : அனர்த்த /  திடீர் விபத்துக்களினால் பாதிக்கப்படுவோர்.

நன்மை : பாதிக்கப்பட்டோருக்காக இடையீடு செய்தலும் நிவாரணங்களை வழங்குதலும்

திடீர் அனர்த்தங்களுக்கான முன்னெச்சரிக்கை பற்றிய நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்தலும் நெடுங்கால, மத்திய கால, குறுங்கால அடிப்படையில் அனர்த்த நிவாரணக் கருத்திட்டங்களை அமுலாக்குதலும்.

அபிவிருத்தி ஒத்துழைப்பு

இலக்குக் குழு : பொதுமக்கள்

நன்மை : சுற்றாடல் மற்றும் சமூக கலாசார சிக்கல்களுக் ன இடையீடு

சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய அபிவிருத்தி சிக்கல்களைத் தீர்ப்ப தற்காக ஒத்துழைத்தல், இலங்கையின் தேசிய, பிரதேச, பிரபல்யமான மற்றும் மரபார்ந்த விளையாட் டுக்களை ஊக்குவித்தலும் அபிவிருத்தி செய்தலும், நவீன மற்றும் மரபார்ந்த கலை நுணுக்கங்களை அபிவிருத்தி செய்தல்,  இத்துறையில் அனுபவசாலிக ளுடன் வலையமைப்பினை ஏற்படுத்திக்கொள்ளல், கிராமிய மற்றும் அடிமட்டம் மீது விசேட கவனம் செலுத்தி அடித்தள உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு உதவுதல்.

 

 

 
 

......................................................................................................................................................................

சிறப்புரிமைகள் குறைந்த மற்றும் வறிய குழுக்கள் மீது விடேச கவனஞ் செலுத்தி மாணவர் குழுக்கள் மற்றும் இளைஞர் குழுக்களுக்கான பல்வேறு கல்விப் பயிற்சித் தொடர்களை ஏற்பாடு செய்தல், நடாத்திவருதல் மற்றும் அபிவிருத்தி செய்தல், ஆற்றல் திறமை விருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி மூலமாக தொழிலுக்காக தயார்படுத்துதல், விளையாட்டுக்கள் மற்றும் கலை நுணுக்கங்கள், தலைமைத்துவம், தகவல் தொழில் நுட்பம், மக்கள் தொடர்பாடல், தமிழ், ஆங்கிலப் பயிற்சி மற்றும் தெரிவுசெய்த ஏனைய மொழிகள் பற்றிய திறன் அபிவிருத்தியும் மக்கள் நலனோம்பல் பணிகளுக்காக இளைஞர்களின் பங்கேற்பினை ஊக்குவித்தல்

......................................................................................................................................................................

     

தொழில்முயற்சி அபிவிருத்தி, சுயதொழில் கருத் திட்டங்கள், நுண் நிதி வசதிகள், திறமைகளையும் கொள்திறனையும் விருத்தி செய்தல், கிராமிய மக்களை வலுவூட்டுதல், அடிமட்டத்திலான சிவில் சமூக அமைப் புக்களின் கொள்திறனை மேம்படுத்துதல் தொடர்பான அவசியப்பாடுகளில் இடையீடு செய்வதன் மூலமாக கிராமிய, நகர்சார் மற்றும் பகுதியளவில் நகர்சார் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு கருத்திட்டங்களை அமுலாக்கல்

......................................................................................................................................................................
   

 

 

......................................................................................................................................................................

   

 

விவசாய, மீன்பிடி மற்றும்  விலங்கு வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட கருத்திட்டங்களை அமுலாக் குதலும் சேதனப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி, பல்வேறு பதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றினூடாக         நவீன தொழில்நுட்ப வழிமுறைகளை அறிமுகஞ்செய்ய உதவுதல்

......................................................................................................................................................................
     

சாதாரண பொதுமக்களின் சுகாதார மற்றும் துப்பரவேற் பாட்டுத் தரங்களை மேம்படுத்துவதற்காக மருத்துவ முகாம்கள் மற்றும் ஆரம்ப, சனசமூக, சுகாதாரக் கருத்திட்டங்களை அமுலாக்குதல், சுகாதார மற்றும் துப்பரவேற்பாட்டு சிக்கல்கள் பற்றிய விழிப்பூட்டலை மேம்படுத்துதல், ஆயூர்வேத மரபுகளின் அபிவிருத்தி, மதுசாரம், புகையிலை மற்றும் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சிகள், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச். ஐ. வி. தடுப்பு முயற்சிகளை அமுலாக்கல்.

......................................................................................................................................................................
     

சனநாயக நன்னெறிகள், சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம், நல்லாட்சி, சமாதானக்கல்வி, முரண் பாட்டுத் தீர்வு மற்றும் முகாமைத்துவம், ஆண் - பெண் சமத்துவம், அதிகாரப் பகிர்வு, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான விழிப் பூட்டலை மேம்படுத்துவதற்கான பல்வேறு உரை யாடல் அரங்குகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், கல்வி மற்றும் பிரச்சாரக் கருத்திட்டங்களை ஏற்பாடு செய்தல்.

......................................................................................................................................................................
     

சுற்றாடல் பேணல் மற்றும் அதனோடு தொடர்புடைய அபிவிருத்திச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக உதவுதல், இலங்கையில் தேசிய, பிரதேச, பிரபல்யமான மற்றும் மரபார்ந்த விளையாட்டுக்கள்,  நவீன மற்றும் மரபார்ந்த கலைநுணுக்கங்களை அபிவிருத்தி செய்தல், அத்துறை சார்ந்த அனுபவசாலிகளுடன் வலையமைப்பினை ஏற் படுத்திக் கொள்ளலும் கிராமிய மற்றும் அடிமட்டங்கள் மீது விசேட கவனஞ்செலுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை  அபிவிருத்தி  செய்தல்.

......................................................................................................................................................................
     

தரவுத்தளத்தின் (Database) ஊடாக அரச, அரச துறையல்லாத மற்றும் தனியார்துறை தொழில்தருநர்களுக்கும் தொழில் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையிலான இணைப்பாக்கம், e தொழில்வங்கி மற்றும் தொழில் கற்கை ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களைத் தொடர்புபடுத்துதல்.

     

முதற்பக்கம்  |  வரலாறு  |  பதி  |  நோக்கு  |  பணி  |  நாம் முனைந்து நிற்பது  |  எமது நம்பிக்கைகள்  |  கருத்திட்ட தொனிப்பொருட்கள் / செயற்பாடுகள்  |  இதுவரை ஈடேற்றிய கருத்திட்டங்கள்

சேவை வழங்கும் பிரதேசங்கள் | அலுவலக வளவுகள்  |  முகாமைத்துவக் குறிப்பு  |  நன்கொடைகள் / உதவிகள்  |  e-தொழில் வங்கி  |  நிழற்படத் தொகுப்பு  |  எம்முடன் தொடர்புகொள்க

பிரசுர உரிமை © 2008 - சமாதி அபிவிருத்தி மன்றம் - முழுப் பதிப்புரிமை உடையது.

Powered by :