இலங்கையில் பல்வேறு கடினப்
பிரதேசங்களில் அமைந்துள்ள
பாடசாலைகளில் கல்வி கற்கின்ற
பெரும்பாலான பிள்ளைகளுக்கு பாடசாலை
நேரத்தில் பருக முறையான குடிநீர்
வசதிகள் கிடையாது
அதைப்போன்றே ஆசிரியர் - மாணவர் ஆகிய
இருசாராருக்கும் ஒரு சில
சந்தர்ப்பங்களில் துப்புரவேற்பாட்டு
வசதிகள்
(மலசல
கூடங்கள்) இல்லாமையால் பாரிய
வசதியீனங்கள் தோன்றுகின்றன.
ஒருசில பாடசலைக் கட்டிடங்கள் மோசமான
நிலையில் காணப்படுவதோடு கூரை
இற்றுப்போய் பிள்ளைகளில் தலைமீது
சரிந்து வீழ்ந்து பாரிய அனர்த்தம்
ஏற்படக்கூடிய இடங்களை நாம் அடிக்கடி
காண்கின்றௌம்.
இத்தகைய பாடசாலைகளுக்காக உங்களின்
அல்லது காலஞ்சென்ற உறவினரின் பெயரில்
நன்கொடை வழங்கி தேசத்தின்
எதிர்காலத்தைப் பொறுபேற்கும்
எதிர்காலச் சந்ததியினரை
பாதுகாத்துக்கொள்ள உங்களுக்கு அழைப்பு
விடுக்கின்றோம். நீங்கள் பெயர்
குறிக்கின்ற பாடசாலைகளின்
அபிவிருத்திக்கும் எம்மால்
பங்களிக்கக்கூடிய ஆற்றல்
நிலவுகின்றது.
பாடசாலை அதிபர், வலயக் கல்விப்
பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்விப்
பணிப்பாளர் ஊடாக பெறப்பட்ட
விதப்புரைகள், நிலையப் பரிசோதனைகள்,
நிழற்படங்கள், தொடர் நடவடிக்கை மூலமாக
ஏற்புடைய பாடசாலைகள் தெரிவு
செய்யப்படும்.
அனுரசணையாளர்களுக்கும் மேற்படி
சகலவிதமான தகவல்களும் வழங்கப்படும்.