இத்தகைய ஒரு பசுவுக்கு அபயதானம்
அளிக்க நீங்களும் பங்களிப்புச் செய்க.
உங்கள் பெயரிலோ, உங்களின் பிறந்த
திகதி, உங்கள் பிள்ளை, தாய், தந்தை
அல்லது உறவினரது பிறந்த திகதி அல்லது
பிற விசேட தருணமொன்றை அடிப்படையாகக்
கொண்டு இப்பணியில் பங்கேற்கலாம்.
இறந்த உறவினரது பெயரிலும் பாற்பசு
வொன்றை விடுவித்துக் கொள்ள வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட பாற்பசுக்கள்
இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்ற
பாற்பசுக்களை பாற்பண்ணை விவசாயிகளிடம்
முறைப்படி ஒப்படைக்க சமாதி மன்றம்
நடவடிக்கை மேற்கொள்ளும். எமது
நிறுவனம் அது பற்றிய ஒழுங்கான
தொடர்நடவடிக்கைகளையும் மேற்பார்வை
யையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு
வருகின்றது.
பங்களிப்பு செய்யக்கூடிய விதம்
30,000/=
இலங்கை ரூபா அல்லது 350 ஐக்கிய
அமெரிக்க டொலர்களுடன் அனுசரணையாளரது
தகவல்களை கீழே வாய்ப்பளிக்கப்பட்டுள்ள
வழிமுறையினூடாக அனுப்பி வைப்பதன்
மூலமாக இப்புண்ணிய கருமத்திற்கு
உள்நாட்டு வெளிநாட்டு அனுசரணையாளர்கள்
பங்களிப்புச் செய்யலாம்.