இலங்கையில் மிகவும் கடினமான
பிரதேசங்களில் அமைந்துள்ள
பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள்
தொலைகாட்சியில் அல்லது
செய்தித்தாளில், சஞ்சிகையில்
பிரசுரிக்கப்பட்ட நிழற்படத்தில்
மாத்திரமே கணினியொன்றைக் கண்டுள்ளனர்.
இத்தகைய பிள்ளைகள் உள்ள பாடசாலைக்கு
குறைந்தபட்சம் ஒரு கணினியை யேனும்
நன்கொடையாக வழங்க இயலுமாயின் அது தமது
கல்விச் செயற்பாடு களுக்கு காட்டும்
மாபெரும் உறுதுணையாக அமையுமென
சிலவேளைகளில் பாடசாலை மாணவர்கள்
கூறுகிறார்கள்.
உங்கள் வீட்டில் அலுவலகத்தில்
பாவனையின் பின் அகற்றும் கணினிகள்
இருப்பின் அத்தகைய கணினிகளை
இக்கருத்திட்டத்திற்கு நன்கொடையாக
வழங்குமாறு உங்களை அழைக்கிறௌம்.
இன்றேல் புத்தம்புதிய கணினியொன்னையோ
தற்போது இலங்கையில் சந்தை யில்
‘விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள
பாவித்த கணினியையோ’ இக்கருத்
திட்டத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு
நாங்கள் உங்களைக் கேட்டுக்
கொள்கிறௌம்.
உங்களின் பெயரில் அல்லது காலஞ்சென்ற
உறவினரொருவரின் பெயரில் இந்த
நன்கொடையினை வழங்கும் வாய்ப்பு
நிலவுகின்றது.
பாடசாலை அதிபர், வலயக் கல்விப்
பணிப்பாளர், மற்றும் மாகாணக் கல்விப்
பணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட
விதப்புரைகள், நிலையப் பரிசோதனை,
நிழற் படங்கள் மற்றும்
தொடர்நடவடிக்கைகள் மூலமாக ஏற்புடைய
பாடசாலைகள் தெரிவு செய்யப்படுவதோடு
அனுசரணையாளர்களுக்கும் மேற்படி
தகவல்கள் அனைத்தும் வழங்கப்படும்.
அனுரசணையாளர்களுக்கும் மேற்படி
சகலவிதமான தகவல்களும் வழங்கப்படும்.