ஒரு நிமிடம் சிந்திப்பீராக –
உதவியொன்றைப் புரிவீராக
“மொழி, கணினி மற்றும்
வாழ்க்கைத்தொழில் பயிற்சி
நிலையங்கள்”
இளைஞர்களை தொழில் உலகத்தில்
சேர்க்கும் பொருட்டு அதிநவீன
விவசாயப் பயிற்சியை வழங்குகின்ற “மாதிரி
விவசாயப் பண்ணைகளை” தாபித்தல்
அல்லது கைத்தொழில் துறையுடன்
தொடர்புடைய பயிற்சியை வழங்குகின்ற “தொழில்நுட்ப
பயிற்சி நிலையம்” ஒன்றினை எமது
தாய்நாட்டின் எதிர்காலத்திற்காக
ஆரம்பிக்க நீங்களும் ஊக்கமளியுங்கள்.
நாட்டின் எதிர்காலத்தை உரித்தாக்கிக்
கொள்ளும் பிள்ளைகளுக்கு வாழ்க்கைத்
தொழில் பயிற்சி, விவசாய மற்றும்
கைத்தொழில் கருத்திட்டங்களை
அமுலாக்குகின்ற எமது
நிகழ்ச்சித்திட்டங்களை நாடளாவிய
மட்டத்தில் பேணிவர வீடொன்றையோ
காணியையோ சமாதி சமுதாயம் அபிவிருத்தி
மன்றத்திற்கு அன்பளிப்புச் செய்ய
உங்களுக்கும் வாய்ப்பு
கிடைத்துள்ளதென்பதை மகிழ்ச்சியுடன்
அறிவிக்கிறோம்.
மாத்தறை நகரத்தில் எமது தலைமையகம்
அமைந்துள்ள காணி அத்தகைய நன்கொடை
உறுதி மூலமாக எமக்கு இதற்கு முன்னர்
கிடைத்த ஏறக்குறைய 5 மில்லியன் ரூபா
பெறுமதியான அன்பளிப்பாகும். அத்துடன்
மாத்தறை, தெலிஜ்ஜவில, உனிந்துவெல
பிரதேசத்தில் அமைந்துள்ள எமது
வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையம்
அமைந்துள்ள நிலப்பரப்பும் (8
மில்லியன் ரூபா பெறுமதியானது) இவ்வாறே
நன்கொடை உறுதி மூலமாக எமக்கு கிடைத்த
மற்றுமொரு நன்கொடையாகும்.
உங்களால் அவ்வாறு நன்கொடையாக
வழங்கப்படுகின்ற வீட்டில் அல்லது
காணியில் கட்டியெழுப்படும் பயிற்சி
நிலையத்தை உங்களின் இறந்த உறவினது,
நண்பரது பெயரில் பேணிவர
இயலுமென்பதையும் நினைவுறுத்துகிறோம்.
எதிர்கால இளமையின் மேம்பாட்டுக்காக
உண்மையிலேயே பயனுறுதிமிக்க இந்த
புண்ணிய கருமத்துடன் நீங்களும்
இணையுங்கள். இன்றே தொடர்பு கொள்க. |