மாத்தறை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சமாதி
சனசமூக அபிவிருத்தி மன்றம் இலங்கை பூராவிலும்
சமூக நலனோம்பல் மற்றும் பிற பல்வேறு
கருத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற இலாப
நோக்கமின்றி செயலாற்றுகின்ற தொண்டர் சமூக
சேவைகள் அமைப்பாகும். இது கட்சி அரசியல்
ஈடுபாடுகளற்ற சுயாதீனமான அமைப்பாக
விளங்குவதோடு பெரும்பாலான அரசியல்
கட்சிகளினதும், அனுசரணையைப் பெற்று
வருகின்றது. எமது நிறுவகத்தினால் ஏற்கனவே
இலங்கையில் அமுலாக்கப்பட்டு வருகின்ற அத்துடன்
அமுலாக்க உத்தேசித்துள்ள எமது கருத்திட்டங்களை
முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு நாங்கள்
உங்களின் தயவான அனுசரணையை எதிர்பார்க்கிறோம்.
மாத்தறை சமாதி மன்றம் இலங்கை சனநாயக, சோசலிசக்
குடியரசின் பாராளுமன்றச் சட்டம் மூலமாக
கூட்டிணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது
மாத்தறை மாவட்டச் செயலகத்திலும் இலங்கை சனநாயக
சோசலிசக் குடியரசின் சமூக சேவைகள் அமைச்சிலும்
பதிவு செய்யப்பட்டுள்ளது. |